NEW YARL.com

NEW YARL.com

Hot

Post Top Ad

Post Top Ad

Wednesday, August 2, 2017

ரவுண்டுகட்டும் வடகொரியா… அச்சத்தில் அமெரிக்க உளவுத்துறை

4:33 AM 0


தன்னை தானே உலக வல்லரசு என்று கூறிக்கொள்ளும் அமெரிக்காவிற்கு, சிம்ம சொப்பமானமாக இருப்பது வடகொரியா மட்டுமே.உலக நாடுகளின் ஒட்டுமொத்த  எதிர்ப்பையும் சட்டையே செய்யாத வடகொரியா, அவவப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளது. ஹாவசாங்௧4 என்ற பெயர் கொண்ட இந்த ஏவுகணை, 3,724.9 கிமீ உயரமாக எழும்பி, 998 கிமீ தூரம் பயணித்து கொரிய தீபகற்பத்தின் கிழக்கே கடலில் விழுந்துள்ளது.

இதனை அந்நாட்டு அதிபர் கிம், நேரில் பார்வையிட்டுள்ளார். இதன் பாதிப்பு அதிகம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளுடம் தீவிர ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

ஆனால் அமெரிக்கா எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Read More

பிக்பாஸ் வீட்டில் சிகரெட் பிடித்து மாட்டி கொண்ட ரைசா, காயத்ரி…! சினேகன் என்ன செய்தார் தெரியுமா-?

4:11 AM 0


தமிழகம் முழுக்க இன்று ஒரே சேர அனைத்து தரப்பு மக்களையும் கட்டிப்போட்டுள்ள ஒரே விஷயம் என்னவென்றால் அது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் பரபரப்பையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்துகிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அறைகளில் ஒன்று ஸ்மோக்கிங் ரூம். சிகரெட் பிடிப்பவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அறை. இந்த அறைக்கு அடிக்கடி ஆரவ் சென்று சிகரெட் பிடித்து வந்தார்.

பெண்களில் ரைசா அடிக்கடி சென்று சிகரெட் பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு ஓவியாவும், ஜூலியும் உதவி செய்துள்ளனர். அப்படித்தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட ஸ்மோக்கிங் அறையில் ரைசா இருந்தபோது ஒரு தவளை இருந்தது.

இதனை ஜூலி கையுறை மாட்டி கொண்டு வந்து தவளையை எடுத்து போட்டார். மேலும் முன்பு ஒரு முறை காயத்ரி கூட சிகரெட் பிடித்தார் என செய்திகள் பரவியது. இவர்களை தவிர இந்த ஸ்மோக்கிங் அறையை பயன்படுத்துபவர் சினேகன். இவர் பெண்களை கட்டிபிடித்து சமாதானப்படுத்த வேண்டும் என்றால் இந்த ஸ்மோக்கிங் அறைக்குள்தான் அழைத்து செல்வார். சமாதானப்படுத்த இவருக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா என்ன?
Read More

ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைப்பதில் இரண்டு ஆண்களுக்குள் ஏற்பட்ட விரோதம்: பின்னர் நடந்த விபரீதம்

3:59 AM 0


தூத்துக்குடி திரவியபுரம் 4 வது தெருவை சேர்ந்த கார் டிரைவர் ஜான்சன். இவர் கடந்த 4 ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திரவியபுரத்தை ராணிக்கும் ஜான்சனுக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டது. இதனால் ராணி அடிக்கடி ஜான்சன் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

ஏற்கனவே ராணி தனியார் நிறுவன ஊழியர் தர்மராஜ் என்பவருடன் கள்ளதொடர்பு வைத்திருந்தார். அறிந்த தர்மராஜ் ராணியுடன் வைத்துள்ள உள்ள உறவை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதனால் ஜான்சனை தர்மராஜ் கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
இருவருக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக ஜான்சன் தர்மராஜை கொலை செய்ய முடிவு செய்தார் .இதற்கு ராணியும் ஒத்துழைத்தார்.

நேற்று முந்தினம் மாலை ஜான்சன் வீட்டுக்கு வந்த ராணி போனில் தொடர்பு கொண்டு அங்கு வருமாறு கூறினார். இதனால் தர்மராஜ் ஜான்சன் வீட்டுக்கு சென்றார் அப்போது அங்கு மறைந்திருந்த நான்கு பேர் தர்மராஜை சரமாரியக வெட்டி கொலை செய்தனர். இதையடுத்து ஜான்சன் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.மேலும் தர்மராஜின் கள்ளகாதலியை போலீசார் நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More

தாயும் மகனும் மின்சாரம் பாய்ச்சி துடிதுடிக்க கொலை ; இங்கே நடப்பது தான் என்ன என்று தெரியவில்லை

2:49 AM 0


தமிழகத்தில் திருக்கோவிலூர் அருகிலுள்ள கிராமம் ஒன்றில் தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சி தாயும் மகனும் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர் அருகில் உள்ள கொங்கராயனூர் என்கிற கிராமத்திலே இக்கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. நிலத்திற்காக அப்பகுதியைச் சேர்ந்த பேபி என்ற தலித் பெண்ணும் அவரது மகன் எழிலும் கொல்லப்பட்டுள்ளனர்.

பேபி எனற பெண்ணுக்கு சிறிய அளவில் நிலம் இருந்ததுள்ளது. பேபியின் நிலத்தைச் சுற்றி வேறொருவரின் நிலம் இருந்திருக்கிறது. பேபி தன்னுடைய நிலத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அந்த நிலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். நிலத்திற்கான தண்ணீரும் அந்த நிலத்தின் உரிமையாளரை நம்பிதான் இருக்க வேண்டியிருந்ததுள்ளது.

இந்நிலையில் பேபிக்கு நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு பலமுறை மிரட்டில் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், கடந்த 27ம் திகதி இரவு தண்ணீரை பயன்படுத்த பேபிக்கு அந்த நிலத்தின் உரிமையாளர் அனுமதி வழங்கியுள்ளார். பேபியும் அவரது மகன் எழிலும் தண்ணீரைத் திறந்துவிட சென்றிருந்தபோது தண்ணீரில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி பேபியும் எழிலும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பொலிசார் நடத்திய விசாரணையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது.

வழக்கு பதிவுசெய்த பொலிசார் இரு குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்ததுடன் ஒருவரை தேடிவருகின்றனர்.
Read More

Post Top Ad