ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைப்பதில் இரண்டு ஆண்களுக்குள் ஏற்பட்ட விரோதம்: பின்னர் நடந்த விபரீதம் - NEW YARL.com

Hot

Post Top Ad

Wednesday, August 2, 2017

ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைப்பதில் இரண்டு ஆண்களுக்குள் ஏற்பட்ட விரோதம்: பின்னர் நடந்த விபரீதம்தூத்துக்குடி திரவியபுரம் 4 வது தெருவை சேர்ந்த கார் டிரைவர் ஜான்சன். இவர் கடந்த 4 ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திரவியபுரத்தை ராணிக்கும் ஜான்சனுக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டது. இதனால் ராணி அடிக்கடி ஜான்சன் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

ஏற்கனவே ராணி தனியார் நிறுவன ஊழியர் தர்மராஜ் என்பவருடன் கள்ளதொடர்பு வைத்திருந்தார். அறிந்த தர்மராஜ் ராணியுடன் வைத்துள்ள உள்ள உறவை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதனால் ஜான்சனை தர்மராஜ் கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
இருவருக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக ஜான்சன் தர்மராஜை கொலை செய்ய முடிவு செய்தார் .இதற்கு ராணியும் ஒத்துழைத்தார்.

நேற்று முந்தினம் மாலை ஜான்சன் வீட்டுக்கு வந்த ராணி போனில் தொடர்பு கொண்டு அங்கு வருமாறு கூறினார். இதனால் தர்மராஜ் ஜான்சன் வீட்டுக்கு சென்றார் அப்போது அங்கு மறைந்திருந்த நான்கு பேர் தர்மராஜை சரமாரியக வெட்டி கொலை செய்தனர். இதையடுத்து ஜான்சன் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.மேலும் தர்மராஜின் கள்ளகாதலியை போலீசார் நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad