தாயும் மகனும் மின்சாரம் பாய்ச்சி துடிதுடிக்க கொலை ; இங்கே நடப்பது தான் என்ன என்று தெரியவில்லை - NEW YARL.com

Hot

Post Top Ad

Wednesday, August 2, 2017

தாயும் மகனும் மின்சாரம் பாய்ச்சி துடிதுடிக்க கொலை ; இங்கே நடப்பது தான் என்ன என்று தெரியவில்லைதமிழகத்தில் திருக்கோவிலூர் அருகிலுள்ள கிராமம் ஒன்றில் தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சி தாயும் மகனும் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர் அருகில் உள்ள கொங்கராயனூர் என்கிற கிராமத்திலே இக்கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. நிலத்திற்காக அப்பகுதியைச் சேர்ந்த பேபி என்ற தலித் பெண்ணும் அவரது மகன் எழிலும் கொல்லப்பட்டுள்ளனர்.

பேபி எனற பெண்ணுக்கு சிறிய அளவில் நிலம் இருந்ததுள்ளது. பேபியின் நிலத்தைச் சுற்றி வேறொருவரின் நிலம் இருந்திருக்கிறது. பேபி தன்னுடைய நிலத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அந்த நிலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். நிலத்திற்கான தண்ணீரும் அந்த நிலத்தின் உரிமையாளரை நம்பிதான் இருக்க வேண்டியிருந்ததுள்ளது.

இந்நிலையில் பேபிக்கு நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு பலமுறை மிரட்டில் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், கடந்த 27ம் திகதி இரவு தண்ணீரை பயன்படுத்த பேபிக்கு அந்த நிலத்தின் உரிமையாளர் அனுமதி வழங்கியுள்ளார். பேபியும் அவரது மகன் எழிலும் தண்ணீரைத் திறந்துவிட சென்றிருந்தபோது தண்ணீரில் பாய்ச்சப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி பேபியும் எழிலும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பொலிசார் நடத்திய விசாரணையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது.

வழக்கு பதிவுசெய்த பொலிசார் இரு குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்ததுடன் ஒருவரை தேடிவருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad