ரவுண்டுகட்டும் வடகொரியா… அச்சத்தில் அமெரிக்க உளவுத்துறை - NEW YARL.com

Hot

Post Top Ad

Wednesday, August 2, 2017

ரவுண்டுகட்டும் வடகொரியா… அச்சத்தில் அமெரிக்க உளவுத்துறைதன்னை தானே உலக வல்லரசு என்று கூறிக்கொள்ளும் அமெரிக்காவிற்கு, சிம்ம சொப்பமானமாக இருப்பது வடகொரியா மட்டுமே.உலக நாடுகளின் ஒட்டுமொத்த  எதிர்ப்பையும் சட்டையே செய்யாத வடகொரியா, அவவப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளது. ஹாவசாங்௧4 என்ற பெயர் கொண்ட இந்த ஏவுகணை, 3,724.9 கிமீ உயரமாக எழும்பி, 998 கிமீ தூரம் பயணித்து கொரிய தீபகற்பத்தின் கிழக்கே கடலில் விழுந்துள்ளது.

இதனை அந்நாட்டு அதிபர் கிம், நேரில் பார்வையிட்டுள்ளார். இதன் பாதிப்பு அதிகம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளுடம் தீவிர ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

ஆனால் அமெரிக்கா எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad